சுடச்சுட

  

  கடையநல்லூரில் நாளை ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டம்: ஏற்பாடுகள் தீவிரம்

  By கடையநல்லூர்,  |   Published on : 27th December 2013 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடையநல்லூரில் சனிக்கிழமை திமுக பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி மேடை அமைக்கும் பணி, வரவேற்பு வளைவுகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

  திமுக பொதுக்குழு தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம், கடையநல்லூர் பெரியபள்ளிவாசல் திடலில் சனிக்கிழமை இரவு நடைபெறுகிறது.

  இதில், கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறார்.

  இதற்காக பெரிய அளவில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தென்காசி-மதுரை சாலையில் வழி நெடுக வரவேற்பு வளைவுகள் வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கூட்டம் நடைபெறும் பகுதிகளில் டிஜிட்டல் பதாகைகளை வைக்க போட்டிபோட்டு வருகின்றனர். ஆனால், அங்கு போதிய இடமில்லாததால் விளம்பரப் பதாகைகள் வைக்க வழியின்றி கட்சியினர் தவித்து வருகின்றனர்.

  போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு: பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது. மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் குவியும் வாய்ப்புள்ளதால், ஏராளமான வாகனங்கள் இப்பகுதியில் நிறுத்தப்படும். இதனால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட காவல்துறை உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai