சுடச்சுட

  

  களக்காடு அருகே டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீஸார் வியாழக்கிழமை கைதுசெய்தனர்.

  களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன்கள் கண்ணன் (35) மற்றும் குமார் (32). இருவரும் பதிவெண் இல்லாத டிராக்டரில் வியாழக்கிழமை சிதம்பரபுரம் பழங்குளம் ஓடையில் மணல்அள்ளி கடத்தினராம்.

  தகவலறிந்து வந்த களக்காடு காவல் சிறப்பு உதவிஆய்வாளர் துரைசிங்கம், மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்து, குமாரை கைதுசெய்தார். தலைமறைவான கண்ணனை போலீஸார் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai