சுடச்சுட

  

  களக்காடு - நெல்லைக்கு பஸ் இயக்க வலியுறுத்தல்

  By களக்காடு,  |   Published on : 27th December 2013 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  களக்காடு-திருநெல்வேலிக்கு மீனவன்குளம் வழியே ஒரு சுற்று மட்டும் இயக்கப்படும் அரசு பஸ்ûஸ, தொடர்ந்து நாள் முழுவதும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

  இதுதொடர்பாக தேவநல்லூர் ஊராட்சித் தலைவர் வி. மாணிக்கம், திருநெல்வேலிக்கு  வந்த சட்டப்பேரவை மனுக்கள் குழுவிடம் அளித்த மனு விவரம்:

  வள்ளியூரில் இருந்து புறப்படும் அரசு பஸ் (தடம் எண்-250) களக்காடு வந்து, பின்னர் மீனவன்குளம் வழியே திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் காலை 7.45-க்கு களக்காடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு படலையார்குளம், புதூர், கல்லடிசிதம்பரபுரம், பெருமாள்குளம், பொத்தைசுத்தி, கள்ளிகுளம்சத்திரம், துவரைகுளம், மீனவன்குளம், அப்பர்குளம், நடுவக்குளம், புதுக்குளம், சூரப்பபுரம், பானான்குளம், மூன்றடைப்பு வழியாக திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தை காலை 9 மணிக்குச் சென்றடைகிறது.

  கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, களக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்கு தினந்தோறும் ஒரு சுற்று மட்டுமே இப்பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்ûஸத் தவறவிட்டால், இப்பகுதி கிராம மக்கள் களக்காடு வந்துதான் திருநெல்வேலிக்குச் செல்ல முடியும். இதனால் கூடுதல் பயணநேரமும், பண விரயமும் ஏற்படுகிறது.

  தினந்தோறும் ஒரே ஒரு முறை மட்டும் இயக்கப்படும் இந்த அரசு பஸ்ûஸ, தொடர்ந்து நாள் முழுவதும் இதே வழித்தடத்தில் இயக்க வேண்டும். இதன் மூலம் 5 ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவர் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai