சுடச்சுட

    

    காவல் நிலையம் அருகே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற புரோட்டா மாஸ்டர்

    By திருநெல்வேலி  |   Published on : 27th December 2013 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலையம் அருகே வியாழக்கிழமை கழுத்தை அறுத்து புரோட்டா மாஸ்டர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

     சேரன்மகாதேவி அருகே உள்ள ஓடைகரை பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் யோவான் (42). இவர், கேரளத்தில் உள்ள ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மிக்கேல் ராஜம்மாள் மற்றும் குழந்தைகள் ஓடைகரையில் வசித்து வருகின்றனர். 15 நாள்களுக்கு ஒருமுறை வந்து குடும்பத்தினரை யோவான் பார்த்துச் செல்வாராம்.

     இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்தபோது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மிக்கேல் ராஜம்மாள், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வியாழக்கிழமை யோவானிடம் விசாரணை நடத்தினர்.

     காவல் நிலையத்தில் இருந்து வெளியேறிய யோவான், பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றராம். காயமடைந்த அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai