சுடச்சுட

  

  கே.டி.சி. நகரில் புறக்காவல் நிலையம்: மக்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்

  By திருநெல்வேலி  |   Published on : 27th December 2013 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் நலச்சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

   பாளையங்கோட்டை வ.உ.சி. நகர் மக்கள் நலச்சங்கம் சார்பில், போலீஸ் மற்றும்  பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம், அதன் தலைவர் எஸ். சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாநகர குற்றப்பிரிவு இணை ஆணையர் இ.டி. சாம்சன், காவல் உதவி ஆணையர் ஆர். மாணிக்கம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஏ. சிவகாமிநாதன், டாக்டர் சரஸ்வதி, ஏ. பிரம்மா, மாமன்ற உறுப்பினர் எம். பிரான்சிஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பாளையங்கோட்டை வ.உ.சி. நகர் உள்ளிட்ட பகுதியில் நிலவும் திருட்டு போன்ற குற்றங்களைத் தடுக்கும் வகையில் கே.டி.சி. நகரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

   இப்பகுதியில் காவலர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கவேண்டும். அங்குள்ள கல்லூரியில் பயிலும் மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பை பலபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எஸ். சுப்பையா வரவேற்றார். கே. தங்கம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai