சுடச்சுட

  

  மானூர், சுத்தமல்லி பகுதிகளில் பா.ஜ.க. சார்பில் தெருமுனைப் பிரசாரங்கள் நடைபெற்றன.

  வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை என்ற தலைப்பில் இந்தியா முழுவதும் பா.ஜ.க.வினர் பிரசாரம் நடத்தி வருகின்றனர்.

  மானூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். வேலாயுதம் தலைமை வகித்தார். மானூர் ஒன்றியத் தலைவர் மு. திருவாளி முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலர் சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாராயணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர் ஏ. தயாசங்கர் ஆகியோர் பேசினர்.

  கீழப்பிள்ளையார்குளம் எஸ். கணபதி, எம்.எஸ். முருகன், கே.எஸ். மணி, வேல்முருகன், இத்திகுளம் மாணிக்கம், கே. காளிமுத்து, அப்ரானந்தசுவாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  இதேபோல பல்லிக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட திருத்து கிராமத்திலும் பா.ஜ.க.வினர் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

  சுத்தமல்லி: சுத்தமல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசாரக் கூட்டத்துக்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் மு. பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொதுச் செயலர் எஸ்.வி. குருசாமி, மாவட்ட அமைப்புச் செயலர் டி.வி. சுரேஷ், மாமன்ற உறுப்பினர் பேட்டை பொன். அழகேசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவர் தயாசங்கர், ஒன்றிய துணைத் தலைவர் கே.எஸ். மணி ஆகியோர் பேசினர்.

  திருநெல்வேலி மண்டலத் தலைவர் பரமசிவன், மண்டலப் பொதுச் செயலர் சிவசக்திலிங்கம், சேரன்மகாதேவி ஒன்றியத் தலைவர் சண்முகவேல், ஆறுமுகம், வழக்குரைஞர் வீரராஜ், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் ராஜதுரை, இசக்கிமுத்து, மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai