சுடச்சுட

  

  தச்சநல்லூர் மண்டல மாநகராட்சிக் கூட்டத்தில் ரூ. 24 லட்சத்தில் கழிப்பறை, குடிநீர் திட்டப் பணிகளுக்கு அனுமதி

  By திருநெல்வேலி,  |   Published on : 27th December 2013 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாநகராட்சியின் தச்சநல்லூர் மண்டல சாதாரணக் கூட்டத்தில் சுகாதார வளாகம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் அனுமதியளிக்கப்பட்டது.

   தச்சநல்லூர் மண்டல மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மண்டலத் தலைவர் கே. மாதவன் தலைமை வகித்தார். இதில் மன்ற உறுப்பினர்கள் கணேசன், முத்துராஜ், சுப்பிரமணியன், ஜெயபாரதி, சண்முகவேலு, வேல்ராஜ், கோமதிநாதன் உள்ளிட்டோர் தங்களது வார்டுகளில் உள்ள குறைகள் குறித்தும், சாலை மற்றும் குடிநீர்த் தேவைக்கான பணிகளை நிறைவேற்றக் கோரியும் கோரிக்கை விடுத்தனர்.

   மேலும், மாநகராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் மரியாதையாக நடத்த வேண்டும் எனவும், மாநகராட்சி உறுப்பினர்களது கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

   இதற்கு, பதில் அளித்து தலைவர் கே. மாதவன் பேசகையில், வார்டு உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து, விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக குடிநீர்த் திட்டப் பணிகளுக்கும், சாலைகள் சீரமைப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.

   கூட்டத்தில்,  கீழக்கரை, பிரான்குளம் பெருமாள்கோவில் தெருவில் உள்ள சுகாதார வளாகங்களைப் பழுது பார்த்தல், மங்களா குடியிருப்பு, தாராபுரம் நியூ காலனி  மற்றும் வார்டு எண் 8, 9, 10, 39 ஆகிய பகுதிகளில் குடிநீர் பகிர்மான குழாய் அமைத்தல், குறுக்குத்துறை நீரேற்று நிலையத்தில் மணல்படுகைகள் சுத்தம் செய்தல்,  பாபுஜி ஜெகஜீவன்ராம் காலனியில் கழிவுநீர் ஓடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 24 லட்சத்தில் அனுமதியளிக்கப்பட்டது. இவைத் தவிர மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai