சுடச்சுட

  

  நெல்லையில் நாளை அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம்

  By திருநெல்வேலி,  |   Published on : 27th December 2013 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து திட்டமிடும் வகையில், திருநெல்வேலியில் அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை (டிச. 28) நடைபெற உள்ளது.

  இது தொடர்பாக, அதிமுக மாவட்டச் செயலர் எஸ். முத்துக்கருப்பன், திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

  திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி நகரம், பார்வதி சேஷ மஹாலில் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

  கூட்டத்துக்கு, தூத்துக்குடி மேயரும், அதிமுக மகளிரணிச் செயலருமான எல். சசிகலா புஷ்பா தலைமை வகித்து சிறப்புரையாற்றுகிறார். அதிமுக அமைப்புச் செயலர் பி.ஹெச். பாண்டியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. செந்தூர்பாண்டியன், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் பி.ஹெச்.பி. மனோஜ் பாண்டியன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர். முருகையா பாண்டியன், திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் எஸ். முத்துக்கருப்பன்,  திருநெல்வேலி மேயரும், மாநகர் மாவட்ட அதிமுக மகளிரணிச் செயலருமான விஜிலா சத்தியானந்த் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.

  கூட்டத்தில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளுக்குள்பட்ட எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவுத் தலைவர்கள் மற்றும் மகளிரணியினர் கலந்துகொள்ளவுள்ளனர். இக்கூட்டத்தில், அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்குவதோடு, நாடாளுமன்றத் தேர்தலில் மகளிரணியின் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.

  பொதுக்கூட்டங்கள்: இதேபோல, கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் டிச. 28, 29-ஆம் தேதிகளில் பொதுக்கூட்டங்களும் நடைபெறும். 

  வாசுதேவநல்லூர், பாளையங்கோட்டை தொகுதியில் சனிக்கிழமை மாலையும், திருநெல்வேலி, கடையநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை  மாலையும் இப்பொதுக்கூட்டங்கள் நடைபெறும். இதில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் பேசுகின்றனர் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai