சுடச்சுட

  

  பாலியல், கருக்கலைப்பு வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் பாதிரியார் ஆஜர்

  By திருநெல்வேலி,  |   Published on : 27th December 2013 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாலியல் மற்றும் கருக்கலைப்பு புகார் தொடர்பான வழக்கில்  உத்தமபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்த பாதிரியார் செல்வன் (35),  திருநெல்வேலி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன், திருநெல்வேலி பேட்டையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்தார். தேவாலயத்துக்கு வந்த 10-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்ததில் அந்த மாணவி கர்ப்பமானார்.

  இதையடுத்து 5 மாதமான சிசுவை திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்த பெண் டாக்டர் உதவியுடன் கலைத்துவிட்டனராம். இதுதொடர்பான புகாரில் திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து பாதிரியாரைத் தேடி வந்தனர். புதைக்கப்பட்ட சிசுவின்  சடலமும் கடந்த 20-ஆம் தேதி தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதே நாளில் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் செல்வன் சரணடைந்தார். இதையடுத்து திருநெல்வேலி நீதிமன்றத்தில்  டிச.26-ஆம் தேதி ஆஜர்படுத்தவும் உத்தமபாளையம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

  இதன்படி, போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் இருந்து வியாழக்கிழமை அழைத்துவரப்பட்ட பாதிரியார் செல்வன், திருநெல்வேலி 5-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை வரும் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி இசக்கியப்பன் உத்தரவிட்டார். இதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai