Enable Javscript for better performance
பாளை.யில் இலக்கியச் சொற்பொழிவு- Dinamani

சுடச்சுட

    

    பாளை.யில் இலக்கியச் சொற்பொழிவு

    By திருநெல்வேலி  |   Published on : 27th December 2013 02:29 AM  |   அ+அ அ-   |    |  

    கம்பன் இலக்கியச் சங்கம் சார்பில், பாளையங்கோட்டையில் உள்ள மாநில தமிழ்ச் சங்க வளாகத்தில் 899-ஆவது இலக்கியச் சொற்பொழிவு நடைபெற்றது.

     சங்கத்தின் பொருளாளர் மு.அ. நசிர் தலைமை வகித்தார். பேராசிரியர் பா. வளன்அரசு முன்னிலை வகித்தார். தி. ராமன் வரவேற்றார். கம்பனும் திருவள்ளுவமும் என்ற தலைப்பில் செ. திவானும், கம்பன் காட்டும் களவியலும், கற்பியலும் என்ற தலைப்பில் சங்கச் செயலர் மு. கனகராசும், கண்ணன் என் சேவகன் என்ற தலைப்பில் ந. ராசகோபாலும், தமிழ் மொழியின் இலக்கணம் என்ற தலைப்பில் தி. முகுந்தனும் பேசினர். நல்லாசிரியர் ச. செல்லப்பா, தொழிற்சங்கத் தலைவர் பி. ஆவுடையப்பன், சுப்பிரமணியம், முத்துகுமாரசாமி, நாகராசன், முத்துசாமி, தர்மர், ஆனந்தன், பாக்கியசாமி, வெள்ளைப்பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர். ரா. முருகன் நன்றி கூறினார்.

    kattana sevai