சுடச்சுட

  

  பாளை. கல்லூரியில் ஆய்விதழ் வெளியீட்டு விழா

  By திருநெல்வேலி  |   Published on : 27th December 2013 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஆய்விதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.

  கல்லூரி நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சார்பில், உரையரங்கில் நடைபெற்ற பன்னாட்டு ஆய்விதழ் குறியீட்டுடன் கூடிய சதக்கத் எனும் ஆய்விதழ் வெளியீட்டு விழாவுக்கு கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் கே.ஏ. மீரான்முகைதீன் தலைமை வகித்தார்.

  விழாவில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) டி. தமிழ்ச்செல்வம் ஆய்விதழை வெளியிட, முதல் பிரதியை கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் பெற்றுக் கொண்டார். விழாவில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகப் புள்ளியியல் துறைப் பேராசிரியர்  செந்தாமரைக்கண்ணன், கல்லூரி முதல்வர் எம். முகமதுசாதிக், தமிழ்த்துறைத் தலைவர்  ச. மகாதேவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

   ஆய்விதழின் முதன்மை ஆசிரியர் ஒய். செய்யது முகம்மது வரவேற்றார். நூலகர் ஆர்.ஆர். சரவணகுமார் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai