சுடச்சுட

    

    மேலப்பாளையத்தில் 29-ல் பொதுத்தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி

    By திருநெல்வேலி  |   Published on : 27th December 2013 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுத்தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 29) நடைபெறுகிறது.

     இதுதொடர்பாக அந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: அரசுப் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியருக்கான தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி மேலப்பாளையம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

     10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிளஸ் 2 மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  இந்த நிகழ்ச்சியில் மேலப்பாளையம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம், பேட்டை, அம்பை, பத்தமடை, சேரன்மகாதேவி பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.

    இலவச கண் சிகிச்சை முகாம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம் கிளை மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிச. 29) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் (பள்ளிவாசல்) வளாகத்தில் நடைபெற உள்ளது. கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai