சுடச்சுட

  

  தூய சவேரியார் கல்லூரியில் வியாபாரமாயணம் என்ற நவீன நாடக நிகழ்வு நடைபெற்றது.

   இக்கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை, மேலும் அமைப்பு, சித்திரமும் கைப்பழக்கம் அமைப்பு ஆகியவை சார்பில் இந்த நாடகம் நடத்தப்பட்டது. காட்சித் தொடர்பியல் துறைத் தலைவர் அருள்தந்தை சேவியர் அந்தோனி தொடங்கி வைத்தார். சித்தரமும் கைப்பழக்கம் அமைப்பின் நிர்வாகி கதிரவவேல் வரவேற்றார்.

   நாடகத்தின் இயக்குநர் ராஜிவ் கிருஷ்ணன், எழுத்தாளர் மு. ராமசாமி, இசையமைப்பாளர் நெல்லை மணிகண்டன், ஒளியமைப்பாளர் சுதர்சனன் உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர். 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்நாடகத்தில் உணவு உற்பத்தி பாதிப்பு, இன்றைய விவசாயச் சூழல் குறித்து விளக்கப்பட்டது. மேலும் அமைப்பின் நிர்வாகி சிவசு நன்றி கூறினார்.

  ஏற்பாடுகளை ஈஸ்வரன், முத்து உள்ளிட்டோர்  செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai