சுடச்சுட

    

    ஆலங்குளம் கொலை வழக்கு: மேலும் 7 பேர் சரண்

    By திருநெல்வேலி/சங்கரன்கோவில்  |   Published on : 28th December 2013 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆலங்குளத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, மேலும் 7 பேர் நீதிமன்றங்களில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.

    ஆலங்குளம் அருகே கடந்த 14-ஆம் தேதி நல்லூரைச் சேர்ந்த செல்வராஜ்,  வைத்திலிங்கம், பூராசா ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இவ் வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஒரு பெண் உள்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர். 2 பேர் மதுரை மேலூர் நீதிமன்றத்திலும், ஒருவர் சங்கரன்கோவில் நீதிமன்றத்திலும், 3 பேர் திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1-லும் சரணடைந்தனர்.

    இந்நிலையில், இவ் வழக்கு தொடர்பாக தெற்குபட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த கோவிந்தன் மகன் தாமரைக்கண்ணன் (25), சிவலார்குளம் பிள்ளையார்கோயில்  தெருவைச் சேர்ந்த கோட்டைசாமி மகன் தாமரைக்கண்ணன் (24) ஆகியோர்  திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 5-ல் வெள்ளிக்கிழமை  சரணடைந்தனர். மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் இசக்கியப்பன், இருவரையும் இம் மாதம் 30-ஆம் தேதி தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், அதுவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

    இவ்வழக்கு தொடர்பாக, சிவலார்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் திருப்பதி (25), சங்கரநாராயணன் மகன் நிர்மல் என்ற அய்யனார் (28), முருகன் மகன் மாரியப்பன் என்ற ஆப்பவாயன் (28) ஆகியோர் சங்கரன்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் முரளிதரகண்ணன் உத்தரவிட்டார்.

    இக்கொலை வழக்கு தொடர்பாக ஆலங்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி (29), சதீஷ் (25) ஆகியோர் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றம் எண் 1-ல் சரணடைந்தனர். அவர்களை காவலில் வைக்க நீதித்துறை நடுவர் ராஜா மகேஷ் உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai