சுடச்சுட

  

  ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்துக்கான மனுக்களை வரும் 8 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்களுக்கு ஆட்சியர் மு.கருணாகரன் அறிவுறுத்தியுள்ளார்.

  இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  திருநெல்வேலி மாவட்ட ஓய்வு பெற்றோர் குறைதீர் நாள் கூட்டம் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் ஓய்வூதிய இயக்குநர், மாவட்ட ஆட்சியர் பங்கேற்கவுள்ளனர்.

  மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கப் பெறாமல் நிலுவை இருந்தால் அத்தகைய குறைகளை தெரிவித்து விண்ணப்பமாக இரட்டைப் பிரதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும்.

  அரசின் நேரடி துறைகளில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பத்தில் எந்த அலுவலகத்தில் இறுதியாக பணிபுரிந்தார், எந்த அலுவலரிடம் கோரிக்கை நிலுவையில் உள்ளது, கோரிக்கை விவரங்கள், ஓய்வூதிய எண், குடும்ப ஓய்வூதிய எண் உள்ளிட்ட முழு விவரங்களையும் விண்ணப்பத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு, விண்ணப்பதாரரின் கையெழுத்துடன் அனுப்ப வேண்டும்.

  இரட்டைப் பிரதிகளில் கையெழுத்துடன் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். துறை அலுவலர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் பிப்.26 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.

  எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் வரும் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். குறைதீர் கூட்டத்திலும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றார் ஆட்சியர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai