சுடச்சுட

  

  களக்காடு ஐயப்பன் கோயிலில் 2 நாள்களாக நடைபெற்ற மண்டல பூஜை நிறைவடைந்ததையடுத்து, கோயில் நடை வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டது.

  களக்காடு ஆற்றங்கரை தெருவில் கௌதம ஆற்றின் கரையோரம் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மண்டல பூஜை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 தினங்கள் நடைபெற்றது.

  வியாழக்கிழமை காலை சிறுவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சுவாமி ஐயப்பனை வேண்டி மாலை அணிந்தனர். 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை, மாலை அணிந்த பக்தர்கள் கோயிலில் இருந்து இருமுடி ஏந்தி நகர வீதிகளில் வலம் வந்தனர்.

  கோயில் முன் பேட்டை துள்ளல் நடைபெற்றது. முன்னதாக, யானை மீது ஐயப்ப சுவாமி தங்க அங்கி அணிந்து வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தார்.

   கோயிலில் சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகமும், தொடர்ந்து சிறப்புப் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இரவு படிபூஜையும் அதைத்தொடர்ந்து புஷ்பாஞ்சலி, ஹரிவராஸனம் முடிவடைந்ததும், கோயில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் கோயில் நடை டிசம்பர் 31-ஆம் தேதி திறக்கப்படும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai