சுடச்சுட

  

  கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி

  By திருநெல்வேலி,  |   Published on : 28th December 2013 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி வண்ணார்பேட்டை மத்திய கூட்டுறவு வங்கியில் கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் தொடங்கியது.

  திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி சரக கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கான இப்பயிற்சி 3 தினங்கள் நடைபெறுகிறது.

  வியாழக்கிழமை இப்பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க. கனகசுந்தரம் பேசுகையில், கூட்டுறவு சட்டம் மற்றும் விதிகள், கூட்டுறவு சங்கங்களின் நடைமுறை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

  பயிற்சியின் ஆரம்பத்தில், அறிவுத்திருக்கோயில் ஆன்மிக கல்வி மையம் மற்றும்  மனவளக்கலை மன்றத்தினர் தெய்வநாயகம், ஆறுமுகம் ஆகியோர் யோகா, காயகல்பப் பயிற்சி, தியானம், தவம், தற்சோதனை எனும் அகத்தாய்வு ஆகியன குறித்து பயிற்சி அளித்தனர்.

  முகாமில், பொதுவிநியோகத் திட்டம் குறித்து திட்ட துணைப்பதிவாளர் எஸ். சுப்பையா, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து, மாநில நுகர்வோர் இணைய துணைத் தலைவர் டி.ஏ. பிரபாகர், கூட்டுறவு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, திட்ட பொதுமேலாளர் இரா. மீராபாய், கூட்டுறவு சங்கங்களை எவ்வாறு தொடர்ந்து லாபத்தில் இயக்குவது என்பது குறித்தும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் இரா. தயாளன், தேசிய வங்கி உதவி பொதுமேலாளர் பி. ராமலிங்கம் ஆகியோர் பேசினர்.

  கூட்டுறவு சார்பதிவாளர்கள் ஆர். சங்கரன், எம். முகைதீன்பாட்ஷா பயிற்சி அளித்தனர். துணைப்பதிவாளர்கள் அ. ரியாஜ்அகமது, சு. பாலகிருஷ்ணன், யோ. தேவசகாயம் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், முதுநிலை அலுவலர்கள், இளநிலை அலுவலர்கள், செயல்பதிவாளர்கள் கலந்துகொண்டனர்.

  கூட்டுறவு சார்பதிவாளர் வி.தி. ஜெபக்குமார்சுதந்திரன் வரவேற்றார். கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநர் சு. முருகபூபதி நன்றி கூறினார். இப்பயிற்சி சனிக்கிழமை நிறைவுபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai