சுடச்சுட

    

    திருப்பூர் அருகே பெண் கொலை வழக்கு: நெல்லை நீதிமன்றத்தில் இளைஞர் சரண்

    By திருநெல்வேலி  |   Published on : 28th December 2013 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் அருகே பெண் கொலை  செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஒருவர் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

    அனுப்பர்பாளையம் அருகே உள்ள தேவநாயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் மனைவி மலர்க்கொடி (34). இத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மலர்க்கொடி தன் குழந்தைகளுடன்  தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி மலர்க்கொடி கொலைசெய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

    இவ் வழக்கு தொடர்பாக கீழப்பாட்டம் மேலத்தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன்  கார்த்திகேயன் என்ற வரதராஜன் (37) திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 5-ல் வெள்ளிக்கிழமை சரணடைந்தார். அவரை 2-1-2014-ல் திருப்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 2-ல் ஆஜர்படுத்தவும், அதுவரை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதித்துறை நடுவர் இசக்கியப்பன் உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai