சுடச்சுட

  

  தூய யோவான் கல்லூரி விவகாரம்: கல்லூரியில் அமைதி திரும்ப ஒத்துழைப்பு

  By திருநெல்வேலி,  |   Published on : 28th December 2013 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூய யோவான் கல்லூரி விவகாரம் தொடர்பாக கல்லூரியில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்துக்குள்பட்ட கல்லூரி முதல்வர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

  இது தொடர்பாக, சங்கப் பொதுச் செயலர் எஸ். டான் தர்மராய் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

  தூய யோவான் கல்லூரியில் இடைநீக்கம் செய்யப்பட்ட இரு ஆசிரியர்களின் இடைநீக்க காலம் நீடிக்கப்பட்ட பிறகும் கல்லூரிக்கு வந்து கடந்த 19ஆம் தேதி முதல்வரை சிறைப்பிடித்து மாலை வரை உணவு சாப்பிட விடாமல் அமரவைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

  நிர்வாக ரீதியான நடவடிக்கைகளுக்கு முதல்வருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், முதல்வரைப் பணிசெய்யவிடாமல் தடுத்து துன்புறுத்திய செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. போலீஸார் வந்து மீட்டுச் செல்லும் அளவுக்கு நிலை மோசமாகியுள்ளது. இச் சம்பவத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறைக்கு சங்கம் பாராட்டு தெரிவிக்கிறது.

  இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களைத் தண்டிக்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் நோக்கமல்ல. அவர்களாகவே தேவையற்றச் செயல்பாடுகளுக்கு இடமளித்துவிட்டனர். இப்போதும், ஆசிரியர்கள் முன்வந்தால் நிர்வாகத்தைச் சந்தித்து சுமூகமாகப் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.

  கல்லூரியில் அமைதி திரும்புவதற்கு மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சங்கம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai