சுடச்சுட

  

  நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களின் தொழிலாளர் துணை ஆணையர் நியமனம்

  By திருநெல்வேலி,  |   Published on : 28th December 2013 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டலத்தில் தொழிலாளர் துணை ஆணையராக எம். பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் தேர்ச்சி பெற்று 1987-ல் திருநெல்வேலியில் தொழிலாளர் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், தொழிலாளர் உதவி ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். பின்னர், சென்னைக்கு மாற்றப்பட்டார்.

  இப்போது, அங்கிருந்து பதவி உயர்வு மூலம் தொழிலாளர் துணை ஆணையராக திருநெல்வேலி மண்டலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

  இவர், அண்மையில் தனது பணிப் பொறுப்பை ஏற்றார். இவருக்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

  திருநெல்வேலி மண்டலத்தில் வேலையாள் இழப்பீட்டுச் சட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் உத்தரவு வழங்கும் அலுவலராக உள்ளார் என திருநெல்வேலி தொழிலாளர் ஆய்வாளர் ஜெ. காளிதாஸ் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai