சுடச்சுட

    

    நெல்லை பஸ் நிலையத்தில் நகை-பணத்துடன் கைப்பை பறிப்புதிருநெல்வேலி

    By திருநெல்வேலி  |   Published on : 28th December 2013 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தில் நகை-பணம் இருந்த கைப்பையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    திருப்பூரைச் சேர்ந்தவர் ஜாகித் அலி. இவர் தனது மனைவி ரசூல்பானு, மகன்கள் அன்வர், ரியாஸ், தாய் கதிஜா ஆகியோருடன் ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை வந்தார். பின்னர் கதிஜாவும், ஜாகித் அலியும் புதிய பஸ் நிலையத்துக்கு சென்றனர். ரசூல்பானு தனது குழந்தைகளுடன் சந்திப்பு பஸ் நிலையத்தில் காத்திருந்தாராம். அப்போது, அவர்கள் 2 பவுன் தங்கநகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்த கைப்பையை மர்மநபர்கள் நோட்டமிட்டதாகத் தெரிகிறது. ரசூல்பானு சற்று விலகிச் சென்ற நேரத்தில் பையை மர்மநபர்கள் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டனராம். இதுகுறித்து அவர் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai