சுடச்சுட

  

  திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  திருநெல்வேலி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் பதவியேற்ற பின், அவர்கள் செய்த பணிகள், நடத்திய மற்றும் பங்கேற்ற போராட்டங்கள் உள்ளிட்டவை குறித்த ஆய்வுப் பணி குற்றாலம் காசிமேஜர்புரத்தில் சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. மாலையில் கடையநல்லூரில் மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

   இவற்றில் கலந்துகொள்வதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரியில் இருந்து தென்காசிக்கு வந்தார். அவருக்கு திருநெல்வேலி மாவட்ட எல்லையான காவல்கிணறு சந்திப்பில் மாவட்ட திமுக செயலர் வீ.கருப்பசாமிபாண்டியன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. தென்காசியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் தென்காசி கிளை பணிமனை முன், அவருக்கு நகர திமுக சார்பில்  வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, நகரச் செயலர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai