சுடச்சுட

    

    ஆலங்குளத்தில் பாலிடெக்னிக் மாணவர், விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாத்தினான்குளத்தைச் சேர்ந்த ஜெயகுமார் மகன் அனந்த் (18). இவர், ஆலங்குளம் அருகே சிவலார்குளம் விலக்கு பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தார்.  கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து வெள்ளிக்கிழமை காலையில் கல்லூரிக்கு வந்த போது தாடியுடன் வந்ததாகக் கூறப்படுகிறது.

    இதை கல்லூரி முதல்வர் கண்டித்தாராம். இதனால் அவர் மன உளைச்சலுடன் காணப்பட்டாராம். கல்லூரி நேரம் முடிந்த பின்னர் அவரது விடுதி அறை பூட்டப்பட்டிருந்ததாம். உள்ளே பார்த்த போது அனந்த் தூக்கிட்டு இறந்தநிலையில் கிடந்தாராம். தகவலறிந்த ஆலங்குளம் போலீஸார், சடலத்தை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai