சுடச்சுட

    

    புதிரை வண்ணார் நலவாரிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

    By திருநெல்வேலி  |   Published on : 28th December 2013 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிரை வண்ணார் நல வாரிய அடையாள அட்டை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தமிழகத்தில் உள்ள புதிரை வண்ணார் இன மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கென தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் அமைக்கப்பட்டு அதன் மூலம் அந்த இன மக்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள புதிரை வண்ணார் இன மக்கள் தகுந்த ஆவணங்களுடன் தங்கள் எல்லைக்குள்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி புதிரை வண்ணார் சாதிச் சான்றிதழ் பெற்ற பின்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்துக்குச் சென்று புதிரை வண்ணார் நல வாரிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai