சுடச்சுட

  

  "புத்தாண்டு நாளில் நள்ளிரவில் கோயில்களின் நடை திறக்கக் கூடாது'

  By திருநெல்வேலி  |   Published on : 28th December 2013 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆங்கில புத்தாண்டு நாளில் நள்ளிரவில் திருக்கோயில்களின் நடை திறக்கக் கூடாது என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

  இதுதொடர்பாக இந்து முன்னணியின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் டி.பாலாஜி கிருஷ்ணசுவாமி வெளியிட்ட அறிக்கை:

  வழக்கமாக இரவு 9 மணிக்கு அர்த்தஜாம பூஜை முடிந்த பின்னர் சாத்தப்படும் திருக்கோயில்களின் நடை, அதிகாலை 5 மணிக்குத்தான் திறக்கப்படும்.

  ஆனால், ஆங்கில புத்தாண்டு நாளில் நள்ளிரவில் திருக்கோயில்களின் நடை திறக்கும் புதிய கலாசாரம் பரவி வருகிறது. இவ்வாறு நடுநிசியில் நடை திறப்பது என்பது ஆகம விதிகளுக்கு மட்டும் எதிரானதல்ல.

  இந்து சமுதாய பாரம்பரியத்துக்கும், கலாசாரத்துக்கும் எதிரானதாகும். எனவே, நள்ளிரவில் கோயில் நடைகளைத் திறக்ககூடாது என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai