சுடச்சுட

  

  தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நலஉரிமைச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் சோமநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கணபதியப்பன் வரவேற்றார். சங்க உறுப்பினர் மீனாட்சிசுந்தரம் இறைவணக்கம் பாடினார். மாநிலப் பொருளாளர் கே.எஸ்.ஆறுமுகம், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் சிவகாமிநாதன், அகமதுஅம்மாள், சங்கரசூரியநாராயணன், ஆதிகேசவன், கந்தகுமார் உள்ளிட்டோர் பேசினர்.

  பென்சன்தாரர்களுக்கு ஊதிய திருத்தம் திருத்தி அகவிலைப்படி வழங்குவதில் கடந்த 10 மாதங்களாக நிலவி வரும் தாமதம் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai