Enable Javscript for better performance
ரேஷன் கார்டுகளை 2014 ஆம் ஆண்டுக்கும் பயன்படுத்தலாம்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    ரேஷன் கார்டுகளை 2014 ஆம் ஆண்டுக்கும் பயன்படுத்தலாம்: ஆட்சியர்

    By திருநெல்வேலி,  |   Published on : 28th December 2013 02:24 AM  |   அ+அ அ-   |    |  

    தற்போது நடைமுறையில் இருக்கும் குடும்ப அட்டைகளை 2014-ம் ஆண்டு இறுதி வரை பயன்படுத்தலாம். புதிதாக உள்தாள் இணைக்க வேண்டியதில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது நடைமுறையில் இருக்கும் குடும்ப அட்டைகளில் 2013ஆம் ஆண்டுக்கு இணைக்கப்பட்ட உள்தாள் காலத்தில் மறுபக்கத்தில் 2014 ஆம் ஆண்டுக்கும் பயன்படுத்தும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது.

    ஆகவே குடும்ப அட்டைகளின் செல்லதக்க காலத்தை 01.01.2014 முதல் 31.12.2014 வரை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டைகளில் ஏற்கெனவே 2014 ஆம் ஆண்டுக்கு பயன்படுத்தும் வகையில் உள்தாள் இணைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தொடர்ந்து குடும்ப அட்டையை பயன்படுத்தி 31.12.2014 வரை நியாயவிலைக் கடைகளில் அத்யாவசியப் பொருள்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai