சுடச்சுட

  

  திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

  விழாவுக்கு, ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜேசையா வில்லவராயர் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் ராமசாமி வரவேற்றார். வைரவராஜ், சரவணன், மருத்துவர் பிரேமசந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  கிராமப்புற மக்கள் சுயதொழில் தொடங்க பயிற்சியளித்து சுயவேலைவாய்ப்பைப் பெருக்க முயன்றதற்காக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநர் நம்பிராஜனுக்கு, ரோட்டரி சங்க சிறப்பு விருது வழங்கப்பட்டது. ரோட்டரி சங்கச் செயலர் குமாரசாமி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai