சுடச்சுட

    

    திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே வேனும் லாரியும் மோதிக்கொண்டதில், கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார். ஓட்டுநர் உள்பட 11 பேர் பலத்த காயமடைந்தனர்.

    சுரண்டையிலிருந்து தினந்தோறும் தூத்துக்குடிக்கு கட்டட வேலைக்காக வேன் ஒன்றில் பணியாளர்கள் செல்வது வழக்கம். வெள்ளிக்கிழமை வழக்கம்போல அந்த வேன் ஆலங்குளம் வழியாக தூத்துக்குடிக்குச் சென்றது. புதூரில் உள்ள தனியார் ஐ.டி.ஐ. அருகில் வேன் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால், வேன் நிலைதடுமாறி லாரியின் பின்பகுதியில் மோதியதாகக் கூறப்படுகிறது.

    இதில், வேனின் முன் பகுதியில் இருந்த சுரண்டை அருகே உள்ள மரியதாய்புரத்தைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஜெயராஜ் (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும், வேன் ஓட்டுநர் ராஜேஷ் (35), கட்டடப் பணியாளர்கள் பெருமாள், தவசி, இன்பராஜ், பிரதாப், சண்முகம், கண்ணன், ராமசாமி, அருள்ராஜ், மாரியப்பன், முருகன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    இவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இறந்த ஜெயராஜிக்கு, ராயம்மாள் என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    இவ் விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai