சுடச்சுட

    

    திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை கட்சியின் 129ஆவது ஆண்டு தொடக்க விழாவும், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே. ராம்நாத் தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் சரவணன் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி எம்பி எஸ்.எஸ். ராமசுப்பு, பொங்கல் பைகளை வழங்கினார். முன்னதாக, கட்சி அலுவலகம் முன் உள்ள இந்திராகாந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு. கட்சிக் கொடியும் ஏற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், டி.கே. பாண்டியன், சங்கரபாண்டியன், முகமது அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து சரணாலயத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் கோயிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai