சுடச்சுட

  

  சிறப்புக் காவலர் இளைஞர் படை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களின் சான்று சரிபார்ப்பு

  By திருநெல்வேலி  |   Published on : 29th December 2013 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிறப்புக் காவலர் இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான அடுத்தக்கட்ட தேர்வு வரும் 30ஆம் தேதி பாளையங்கோட்டையில் நடைபெறுகிறது.

  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்தத் தேர்வில் உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவை நடைபெறும். வரும் திங்கள்கிழமை (டிச.30) அதிகாலை 6 மணி முதல் இந்தப் பணி நடைபெறும்.

  எனவே, எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்ற அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும். அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் நேரடியாக தேர்வு நடைபெறும் மையத்துக்கு வந்து தங்களது அடையாளத்தைக் குறிப்பிடும் வகையில் ஏதேனும் ஓர் சான்றிதழை காண்பித்து அழைப்புக் கடிதம் பெற்று உடனடியாக தேர்வில் கலந்து கொள்ளலாம் என திருநெல்வேலி மாநகரக் காவல்துறை அறிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai