சுடச்சுட

  

  ஜனவரி மாத கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

  By திருநெல்வேலி,  |   Published on : 29th December 2013 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கால்நடைப் பாதுகாப்புத் திட்ட முகாம் திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி மாதம் நடைபெறுகிறது.

  இந்த முகாம்கள் நடைபெறும் தேதி மற்றும் கிராமங்கள் உள்ளிட்ட விவரங்களை ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ளார். இதன்படி, ஜன.3 செல்லப்பிள்ளையார்குளம், 4-ல் சித்ராபுரம், 7-ல் சிவந்திபுரம், கந்தசாமிபுரம், 8-ல் வடமலைசமுத்திரம், 9-ல் கீழஏர்மாள்புரம், அச்சம்பட்டி, 10-ல் திரிகூடபுரம், 11-ல் நந்தன்தட்டை, 21-ல் மானாபரநல்லூர், 22-ல் புதுக்குடி, சுப்பையாபுரம் ஆகிய கிராமங்களில் முகாம்கள் நடைபெறும்.

  23-ல் மேலகருவேலன்குளம், இரதமுடையார் குளம், 24-ல் மாவடிபுதூர், கல்லத்திகுளம், ஆவுடையம்மாள்புரம், 25-ல் ஆண்டார்குளம், முதுமொத்தான்மொழி, செட்டியூர், 29-ல் மேலசிவசுப்பிரமணியபுரம், நல்லூர், மடத்தூர், துவணையில் முகாம் நடைபெறும். ஜன.30-ல் வீரபாண்டியன், செல்லத்தாயார்புரம், 31-ல் கன்னத்திகுளம், அங்கராயன்குளம் ஆகியவற்றில் முகாம் நடைபெறும்.  இந்த முகாம்களை அந்தந்தப் பகுதி கால்நடை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai