சுடச்சுட

    

    திமுக இளைஞரணி ஆய்வுக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    By தென்காசி,  |   Published on : 29th December 2013 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்ட திமுக இளைஞரணி மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் பகுதி அமைப்பாளர்களின் ஆய்வுக் கூட்டம் குற்றாலம் காசிமேஜர்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

    கட்சிப் பொருளாளரும் மாநில இளைஞரணி அமைப்பாளருமான மு.க. ஸ்டாலின் தலைமை வகித்தார். 7 நகராட்சி, 36 பேரூராட்சி, 4 மண்டலம், 19 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 270 நிர்வாகிகளிடம் அவர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். திமுக இளைஞரணி நடத்திய கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவை குறித்து அவர் கேட்டறிந்தார். கூட்டம் நடத்தி, உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்ட நோட்டுகள், புகைப்படங்களை அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

    இது முதல் ஆய்வு கூட்டம் என்பதால் இக் கூட்டத்தில் பங்கேற்காத அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. தொடர்ந்து இதேபோல ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்காத நிர்வாகிகள் பதவியிலிருந்து நீக்கப்படுவர். ஒரு வாரத்துக்குள் உறுப்பினர் சேர்க்கைப் பணியை முடிக்க வேண்டும் என்றார் அவர்.

    மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மா. சுப்பிரமணியன், சுகவனம் எம்.பி., தங்கவேலு எம்.பி., மைதீன்கான் எம்எல்ஏ, ராஜேந்திரன், சம்பத், செந்தில்குமார், பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் பூங்கோதை, சாத்தூர் ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன், தென்காசி ஒன்றியச் செயலர் பா. ராமையா, செங்கோட்டை நகரச் செயலர் எஸ்.எம். ரஹீம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செங்கோட்டை ஆ. வெங்கடேசன், ஆயிரப்பேரி ஊராட்சித் தலைவர் வி. ராமகிருஷ்ணன், தென்காசி நகரச் செயலர் எஸ். நடராஜன் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai