சுடச்சுட

  

  நெல்லையில் அருந்ததி பெண்கள் எழுச்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்

  By திருநெல்வேலி,  |   Published on : 29th December 2013 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அருந்ததி பெண்கள் எழுச்சி இயக்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் சனிக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஸ்கேன், எக்ஸ்ரே, பரிசோதனைக் கூடம், போதிய மருந்து, மாத்திரைகளுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். பெண் மருத்துவர்களை நியமித்து 24 மணி நேர பிரசவ வசதி செய்துதர வேண்டும்.

  அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும். பள்ளிகள் தோறும் குடிநீர், கழிப்பறை வசதியை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்து கொண்டு செல்லும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் கி. மரியசெல்வி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் ஆர். கருணாநிதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.

  பெண்கள் எழுச்சி இயக்க மாவட்ட அமைப்பாளர் சு. ஜெயா வைதேகி வரவேற்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக மாதர் சங்கம், பகுஜன் சமாஜ் கட்சி, தலித் பெண்கள் எழுச்சி இயக்கம், இடஒதுக்கீட்டு பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பேசினர். மனித உரிமைக் கள இயக்குநர் ம. பரதன், ஆர்ப்பாட்டத்தை முடித்துவைத்தார்.

  இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai