Enable Javscript for better performance
பால் கொள்முதல் விலை உயர்வு: முதல்வருக்கு நன்றி- Dinamani

சுடச்சுட

    

    பால் கொள்முதல் விலை உயர்வு: முதல்வருக்கு நன்றி

    By திருநெல்வேலி  |   Published on : 29th December 2013 02:19 AM  |   அ+அ அ-   |    |  

    பால்கொள்முதல் விலையை ரூ. 3 உயர்த்தி வழங்கிய முதல்வருக்கு திருநெல்வேலி ஆவின் நிர்வாகக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    திருநெல்வேலி ஆவின் நிர்வாகக்குழுக் கூட்டம் சனிக்கிழமை அதன் தலைவர் எஸ். ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் எஸ். செங்கான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai