சுடச்சுட

  

  பாளை.யில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

  By திருநெல்வேலி  |   Published on : 29th December 2013 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாளையங்கோட்டையில் பெட்டிக்கடை நடத்தும் பெண்ணிடம் இருந்து 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  பாளையங்கோட்டை பேருந்துநிலையம் அருகே வசிப்பவர் ஆன்ட்ரூஸ். இவரது மனைவி விஜயா (35). வீட்டுக்கு அருகிலேயே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சனிக்கிழமை அதிகாலை கடையை திறந்தபோது, பனிக்காக அணியும் குல்லா அணிந்தபடி வந்த மர்ம நபர் சிகரெட் கேட்டுள்ளார். பின்னர், பாக்கு வேண்டும் எனக் கூறிவிட்டு காத்திருந்தார். அப்போது, விஜயா அணிந்திருந்த சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். விஜயாவின் சப்தம் கேட்டு அருகிலிருந்தோர் ஓடி வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த மற்றொரு நபருடன் மர்ம நபர் தப்பியோடினார். இது தொடர்பாக, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai