சுடச்சுட

  

  "40 தொகுதிகளின் வெற்றிக்கு அதிமுக மகளிரணி முக்கிய பங்களிக்கும்'

  By திருநெல்வேலி,  |   Published on : 29th December 2013 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளின் வெற்றிக்கு அதிமுக மகளிரணி பிரதானமாக பங்களிக்கும் என அதன் மாநிலச் செயலரும், தூத்துக்குடி மாநகர மேயருமான எல். சசிகலா புஷ்பா உறுதியளித்தார்.

  திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:

  மூன்றாவது முறையாக தமிழக முதல்வர் பதவியேற்று இரண்டரை ஆண்டுகளிலேயே தொலைநோக்கு திட்டங்களை தந்து தமிழகத்தை முன்னேற்றமடையச் செய்தவர் முதல்வர் ஜெயலலிதா. குறிப்பாக பெண்கள் சமூக, பொருளாதார நிலையில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளனர்.

  எனவே, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது தர்மயுத்தமாகும். 5 ஆண்டுகள் ஊழலில் திளைத்த திமுக, காங்கிரûஸ வீழ்த்தும் யுத்தத்துக்கு ஜெயலலிதா தலைமையேற்றுள்ளார். இந்த யுத்தத்தில் வென்று செங்கோட்டைக்கு செல்ல மகளிரணியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார்.

  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. செந்தூர்பாண்டியன் பேசியது:

  பெரும் பணக்காரர்கள் கையில் மட்டுமே இருந்த மடிக்கணினியை தமிழகத்தில் கிராமத்து ஏழைக் குழந்தைகளிடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது. கருவில் இருக்கும்போது உதவித்தொகை தந்து காலம் முழுவதும் காக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செய்திடாத வகையில் தமிழகத்தில் செயல்படுóத்தியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அவர் நாட்டின் பிரதமாக வந்தால் மட்டுமே அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி பெறும் என்றார்.

  அதிமுக அமைப்புச் செயலர் பி.ஹெச். பாண்டியன் பேசியது:காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே செல்வாக்கு இல்லை. மாநிலங்களை ஆளும் முதல்வர்களின் செல்வாக்கில்தான் அடுத்து மத்தியில் ஆட்சி அமையும். தமிழகத்தில் அந்த சக்தி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டும். மத்தியில் அதிகாரம் செலுத்த 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். நாளைய பிரதமர் ஜெயலலிதா என்ற உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

  அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் எஸ். முத்துக்கருப்பன், புறநகர் மாவட்டச் செயலர் ஆர். முருகையா பாண்டியன், வழக்குரைஞர் பிரிவுச் செயலர் பி.ஹெச்.பி. மனோஜ்பாண்டியன், மேயர் விஜிலா சத்தியானந்த், மகளிரணி இணைச் செயலர்கள் சரோஜா, சக்தி கோதண்டம், துணைச் செயலர் சகுந்தலா உள்ளிட்ட பலர் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai