சுடச்சுட

    

    47 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு

    By திருநெல்வேலி,  |   Published on : 29th December 2013 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு ஆன்-லைன் முறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

    அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய இருவர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநராகப் பணியாற்றிய மூன்று பேர் மீண்டும் பள்ளிகளில் ஆசிரியர்களாக இடமாறுதல் செய்யவும், பட்டதாரி ஆசிரியர்கள் 42 பேருக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கவும் இந்த கலந்தாய்வு நடைபெற்றது.

    ஆன்-லைன் முறையில் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் அடிப்படையில் ஒளிவு,மறைவுக்கு இடம் அளிக்காமல் இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டது. முதன்மைக் கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில், காலிப் பணிடங்கள், உள் மாவட்டத்தில் உள்ள இடங்கள், வெளி மாவட்டத்தில் உள்ள இடங்கள் உள்ளிட்ட விவரங்களை சென்னையிலிருந்து வந்த பட்டியல் வரிசைப்படி கணினி மூலம் பிரதி எடுத்து அலுவலகத்தில் ஒட்டப்பட்டது.

    கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் பலரும் தங்களது குடும்பத்தினருடன் காலையிலேயே வந்து அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர்.

    இடங்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு அவர்களுக்கான மாநில முன்னுரிமை, தர எண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், பெரும்பாலானோருக்கு வெளி மாவட்டங்களிலேயே இடம் கிடைத்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai