சுடச்சுட

  

  கண் சிகிச்சை முகாம், தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு

  By திருநெல்வேலி,  |   Published on : 30th December 2013 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு நடைபெற்றது.

  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் எம். சம்சுல்லுஹா தொடங்கிவைத்தார். மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து காலை 9 மணி முதல் பிற்பகல் வரை இந்த முகாமை நடத்தின.

  முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். இவர்களில் கண்புரை உள்ள 50 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்க அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு முகாம் இடத்திலேயே சலுகை விலையில் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

  இதற்கான ஏற்பாடுகளை, மாவட்டத் தலைவர் செய்யது அலி, மாவட்டப் பொருளாளர் மைதீன், பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி பொருளாளர் செய்யது இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி: இதேபோல, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி சார்பில் மேலப்பாளையம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தொடங்கிவைத்தார்.

  பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி, பயமின்றி தேர்வு எழுதுதல், உரிய நேரத்தில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதம் குறித்து கல்வியாளர்கள் பெனடிக்ட், பீட்டர் பாஸ்கரன், அப்துல் காதர், சேகர், ஜோசப் சேவியர் ராஜதுரை, முகமது முத்து மீரான் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

  இதற்கான ஏற்பாடுகளை, மாவட்டச் செயலர் பைசல், மாணவரணி மாவட்டச் செயலர் சித்திக் மற்றும் நகர, மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai