சுடச்சுட

    

    சத்துணவுப் பணியாளர் ஒன்றிய புதிய நிர்வாகிகள் தேர்வு

    By திருநெல்வேலி  |   Published on : 30th December 2013 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்துடன் இணைந்த தமிழ்நாடு சத்துணவுப் பணியாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம், திருநெல்வேலி அரசு அலுவலர் ஒன்றிய கட்டடத்தில் நடைபெற்றது. அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் வெ.துளசிராமன் தலைமை வகித்தார். சத்துணவுப் பணியாளர் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அதன்படி தலைவராக பா.சுவாமிதாஸ் (ராதாபுரம்), செயலராக சா.கென்னடி (நான்குனேரி), பொருளாளராக கே.கணேஷ்ராணி (சேரன்மகாதேவி), துணைத் தலைவர்களாக ஏ.ஜெசிந்தாராணி (சேரன்மகாதேவி), ஜெ.முத்தையா (வள்ளியூர்), அமைப்புச் செயலராக இராஜ் கோட்டூர் (சங்கரன்கோவில்), மகளிர் அணிச் செயலராக எஸ்.ஜெயபிரேமா (வள்ளியூர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    புதிய நிர்வாகிகளை முன்னாள் மாநில துணைத் தலைவர் பா.இளங்கோ வாழ்த்திப் பேசினார். ஒன்றியத் தலைவர் சகாயம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai