சுடச்சுட

    

    தச்சநல்லூர் அருகே ரயில் மோதி காயமடைந்த ஐஸ் வியாபாரி சாவு

    By திருநெல்வேலி,  |   Published on : 30th December 2013 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தச்சநல்லூர் அருகே ரயில் மோதி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஐஸ் வியாபாரி சனிக்கிழமை இறந்தார்.

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்கு உள்பட்ட மல்லல் கிராமத்தைச் சேர்ந்த சுடலைமணி மகன் சுதாகர் (35). இவரது மனைவி ராதா. இத் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி குடும்பத் தகராறு காரணமாக ராதா, தனது பெற்றோர் ஊரான தாழையூத்துக்கு வந்துவிட்டாராம். பின்னர் சிறிது நாள்களுக்கு பின்பு சுதாகரும் தாழையூத்தில் வந்து தங்கி ஐஸ் வியாபாரம் செய்து வந்தாராம். இந்நிலையில், தாழையூத்து அருகே கடந்த 25-ம் தேதி இரவு ரயிலில் அடிபட்டு சுதாகர் காயமடைந்து கிடந்தாராம். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சனிக்கிழமை இறந்தார்.  இதுகுறித்து திருநெல்வேலி ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ராஜகுமாரி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai