சுடச்சுட

    

    தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயல்படும் டிராய்

    By திருநெல்வேலி,  |   Published on : 30th December 2013 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தனியார் ஆபரேட்டர்களுக்கே சாதமாக நடந்துகொள்வதாக தேசிய தொலைத் தொடர்பு ஊழியர்கள் சம்மேளனம் (எப்என்டிஓ) குற்றம் சுமத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சங்கத்தின் 4-ஆவது மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மாநாட்டுக்கு சங்க மாவட்டத் தலைவர் ஜான் லூர்துராஜ் தலைமை வகித்தார். தொலைத்தொடர்பு மெக்கானிக் பணியாளர்கள் வி.ஜோசப், முத்துராமலிங்கம் ஆகியோர் சம்மேளனக் கொடியையும், தேசியக் கொடியையும் ஏற்றிவைத்தனர். மாவட்டச் செயலர் எம். நயினார் வரவேற்றார். மாநிலச் செயலர் டி. சந்திரசேகர், மாநாட்டை தொடங்கிவைத்து சங்க நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். மாநில உதவிச் செயலர் கே. கருப்பசாமி, மாநில துணைத் தலைவர் எஸ். செல்லத்துரை, திருநெல்வேலி கிளைத் தலைவர் பி. காந்தி உள்ளிட்ட பலர் பேசினர்.

    பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளைக் கண்காணிக்கவும், நிறுவனங்களின் செயல்பாடுகளை வகைப்படுத்தவும், அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 1997-ல் அமைக்கப்பட்டது. இந்த டிராய் அமைப்பானது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாகவே

    செயல்பட்டு வருகிறது. நடுநிலைமையுடன் பணியாற்றி பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை உடனடியாகப் பெற்றுத்தர வேண்டும்.

    கிராமப்புறங்களில் தொலைபேசி சேவை அளிப்பதற்காக அளிக்கப்படும் நிதியுதவியை பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு பெற்றுத்தர வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபத்தில் இயங்கச் செய்ய அதிகாரிகள், அரசியல் கட்சியினர், தொழிலாளர்கள் ஒன்றிணைந்து நல்ல முடிவுகளை எடுத்து அமல்படுத்த வேண்டும்.

    பிஎஸ்என்எல் கேபிள் பழுதுகளை உடனடியாகச் சரிசெய்து வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா வசதியை அளிக்கவும், பிராட்பேண்ட சேவைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai