சுடச்சுட

  

  நெற்பயிரில் களைக்கருவியால் களை எடுக்க வலியுறுத்தல்

  By திருநெல்வேலி,  |   Published on : 30th December 2013 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேரன்மகாதேவி வட்டாரத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் களைக்கருவி கொண்டு களை எடுக்க வேண்டும் என வேளாண்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

  சேரன்மகாதேவி வேளாண் உதவி இயக்குநர் ச. சத்யஜோஸ், வேளாண் அலுவலர் ஷேக்நூகு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நெல் நடவு பணி முடிந்து நெற்பயிர் இளம் தூர்கட்டும் நிலையில் உள்ளது.

  நெல் நடவு செய்த 10, 20, 30ஆவது நாளில் இருந்து 40 ஆவது நாள்களில் களைக்கருவி கொண்டு களை எடுக்க வேண்டும். கோனோவீடர் எனும் உருளைக்கருவி அல்லது பெட்ரோல் மூலம் இயங்கும் இயந்திரக்களை எடுக்கும் கருவியின் மூலம் களை எடுக்கலாம்.

  இக்கருவிகள் மூலம் களை எடுப்பதால், களைகள் மண்ணில் அமுக்கி விடப்படுகிறது. இதனால் களைச் செடிகளால் மண்ணில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் ஊட்டச்சத்துக்கள் மீண்டும் மண்ணிற்கே திரும்புகிறது.

  களை கட்டுபடுத்தப்படுவதோடு, களைக் கருவி உபயோகிப்பதால் மண் கிளறி விடப்படுகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு வேர்கள் அதிகமாக படர்ந்து வளரவும், இடும் உரங்களை பயிர்கள் நன்கு உள்கொள்ளவும் முடிகிறது.

  கோனோவீடர் எனும் உருளும் களைக் கருவி கொண்டு களை எடுக்கும்போது ஒரு ஏக்கருக்கு 2 தொழிலாளர்கள் போதுமானது. இதன் மூலம் நுண்ணுயிரிகளின் செயல்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. களைக் கருவியை பயன்படுத்துவதற்கு முதல் நாள் நிலத்திற்கு சீரான நீர் பாய்ச்சுவதன் மூலம் களைக் கருவியை இலகுவாக பயன்படுத்தலாம்.

  மேலும் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் சூடோமோனாஸ் ஆகியவற்றை ஒரு கிலோ வீதம் 50 கிலோ எருவுடன் அல்லது மண்புழு உரத்துடன் கலந்து நிலத்தில் இட்டு அதன் பின்னர் களைக் கருவியை பயன்படுத்தினால் நுண்ணுயிரிகள் நன்கு மண்ணில் கலக்க ஏதுவாகும்.

  ஆகவே திருந்திய நெல்சாகுபடி செய்துள்ள விவசாயிகள் களைக்கருவி கொண்டு களை எடுத்து கூலித் தொழிலாளர்களின் செலவை குறைப்பதுடன், நெல் மகசூலை அதிகரிக்க முடியும் என்றனர் அவர்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai