சுடச்சுட

  

  நெல்லையப்பர் கோயில் கோபுரத்தை பாதுகாக்க வேண்டும்: இந்து முன்னணி

  By திருநெல்வேலி,  |   Published on : 30th December 2013 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோவில் கோபுரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

  இந்து முன்னணியின் திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயற்குழுக் கூட்டம், பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.பாலாஜி கிருஷ்ணசுவாமி தலைமை வகித்தார். பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் எஸ்.முத்துசரவணன் வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர்கள் பி.வெட்டும்பெருமாள், ஈ.ராஜீவ்காந்தி, மாவட்டச் செயலர்கள் எம்.பி.பாலன், ஏ.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன் ஆகியோர் பேசினர்.

  தீர்மானங்கள்: அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோவில் கோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் மாநகராட்சி விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ளன. அதனை உடனடியாக அகற்றி திருக்கோவில் கோபுரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான வகையில், ஜனவரி 1-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் பட்டாசு வெடித்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

  அரசு மருத்துவமனைகளில் மதமாற்றப் பிரசாரத்தில் சிலர் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தச்சநல்லூரில் கோயில்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. வேல்.ஆறுமுகம், எம்.ரமேஷ்கண்ணன், எஸ்.சட்டநாதன், வி.ஆர்.கைலாஷ்,  எஸ்.துரைராஜ், ஜி.மூர்த்தி, எஸ்.முத்துப்பாண்டி, ஜி.இசக்கிமுத்து, எஸ்.மாரியப்பன், கே.சரவணன், எம்.பி.வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai