சுடச்சுட

    

    பாலியல், கருக்கலைப்பு மாணவிக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்

    By திருநெல்வேலி  |   Published on : 30th December 2013 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலியல் பலாத்காரம் செய்து, கருக்கலைப்பு செய்யப்பட்ட மாணவிக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பேட்டையில் பாலியல் பலாத்காரம் செய்து, கருக்கலைப்பு செய்ததால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் கல்வி, வாழ்க்கைக்கான முழு நிவாரணம் அரசு வழங்க வேண்டும்.

    பாதிரியார் மீதான வழக்கை விரைந்து முடித்து தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பேட்டை மல்லிமால் தெருவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட அமைப்பாளர் அன்புசெல்வி தலைமை வகித்தார்.

    மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி. சங்கரபாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. கணேசன், கருப்பசாமி, ராமையா, எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி நசீர்கான், தமிழர் களம் அமைப்பைச் சேர்ந்த அல்போன்ஸ், இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பைச் சேர்ந்த பீட்டர், விஜயகுமார், பரதர் நலப்பேரவை எர்வர்ட், தமிழீழன், வழக்குரைஞர் அப்துல்ஜப்பார், அருள்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai