சுடச்சுட

    

    பாளையங்கோட்டையில் 63 மதுபாட்டில்கள் பறிமுதல்

    By திருநெல்வேலி,  |   Published on : 30th December 2013 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டையில் அனுமதியின்றி மது விற்க முயன்றதாக 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 63 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே அனுமதியின்றி சிலர் மது விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸார் அங்கு சென்ற விசாரித்தபோது மது விற்க முயன்றது பாளையங்கோட்டை சாந்திநகரைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் செல்வம் (47), செய்துங்கநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மூக்கையா (47), ராஜாகுடியிருப்பைச் சேர்ந்த மூக்கையா மகன் நாராயணன் (30) என்பது தெரியவந்ததாம்.

    இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், 63 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai