சுடச்சுட

    

    பேட்டையில் மர்மநபர்கள் தாக்குதல்: அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் காயம்

    By திருநெல்வேலி,  |   Published on : 30th December 2013 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி பேட்டையில் மர்மநபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடுபுகுந்து தாக்கியதில் அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் காயமடைந்தார்.

    பேட்டை கீழபஜார் பகுதியைச் சேர்ந்த கே.அமீர் மனைவி ஆயிஷா பானு (39). இவர், 49-வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பைக்கில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் வீடுபுகுந்து அமீரை தாக்கினராம். இதைத் தடுக்க முயன்ற ஆயிஷா பானுவையும் அந்தக் கும்பல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அவரது காதில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து அமீர் கூறுகையில், பைக்கில் வந்தவர்கள் எதற்காக தாக்கினார்கள் என்பது தெரியாது. அவர்கள் வந்ததில் ஒரு பைக்கை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம். இதுகுறித்து போலீஸார் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai