சுடச்சுட

  

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் நாளை நெல்லை வருகை

  By திருநெல்வேலி  |   Published on : 30th December 2013 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, செவ்வாய்க்கிழமை (டிச.31) திருநெல்வேலிக்கு வருகிறார்.

  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

  கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, செவ்வாய்க்கிழமை (டிச.31) திருநெல்வேலி வருகிறார். வி.எம்.சத்திரத்தில் காலை 8 மணியளவிலும், பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே காலை 9 மணிக்கும் கட்சிக்கொடியேற்றுகிறார். அன்று மாலை 5 மணியளவில் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான ஊழியர் கூட்டத்தில் பங்கேற்று, 16-வது மக்களவைத் தேர்தலும்-மார்க்சிஸ்ட் கட்சியின் அனுகுமுறையும் எனும் தலைப்பில் பேசுகிறார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai