சுடச்சுட

  

  ஆணையர் மறைவு: மாநகராட்சியில் இரங்கல் கூட்டம்

  By திருநெல்வேலி  |   Published on : 31st December 2013 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் மாநகராட்சி ஆணையர் த. மோகன் மறைவையொட்டி மாநகராட்சியில் திங்கள்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

  இக்கூட்டத்துக்கு மேயர் விஜிலாசத்யானந்த் தலைமை வகித்தார். துணை மேயர் பூ. ஜெகநாதன், மாநகர செயற்பொறியாளர்கள் நாராயண்நாயர், சௌந்தரராஜன், மண்டலக்குழுத் தலைவர் எம்.சி. ராஜன், என். மோகன், கே. மாதவராமானுஜம், சுகாதாரக்குழு தலைவர் வண்ணைகணேசன், மாமன்ற உறுப்பினர்கள் ஐ. விஜயன், ராஜாபாலன், ஜோசப், அழகுராஜ், தானேஸ்வரன் இரங்கல் தெரிவித்துப் பேசினர். உதவி ஆணையர் து. கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். த. மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai