Enable Javscript for better performance
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

    By திருநெல்வேலி,  |   Published on : 31st December 2013 02:50 AM  |   அ+அ அ-   |    |  

    இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன் குறித்து பேராயர் எஸ்ராசற்குணம் அவதூறாக பேசியதாக புகார் தெரிவித்து திங்கள்கிழமை இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருநெல்வேலி நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாநகர மாவட்டத் தலைவர் டி. பாலாஜிகிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.

    மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கா. குற்றாலநாதன், மாவட்டச் செயலர்கள் வேல். ஆறுமுகம்,  எம்.பி. பாலன், ஏ. சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். துரைராஜ், எஸ். சட்டநாதன், வி.பி. கைலாஷ், ஆர். மூர்த்தி, மண்டலத் தலைவர்கள் எஸ். மாரியப்பன், கே. சரவணன், எம்.பி. வினோத், ஜி. இசக்கிமுத்து, இ. சுரேஷ், முத்துசரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    kattana sevai